குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள், அரசியல்வாதிகள், சமூக தொண்டர்கள் என போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில், குடியுரிமை சட்ட திருத்தம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்கிறது என கூறினார். பின்னர் நடத்தப்படும் போராட்டங்களும், கலவரங்களும் தவறான புரிதலால் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த திருத்த மசோதா சட்டம் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்ட பின்னரே சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் யூகங்களின் அடிப்படையில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு கலவரம் வெடிக்கிறது. புரிதல் இல்லாத காரணத்தினால் மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர். சட்ட திருத்தம் குறித்து மாணவர்களும் தெரிந்துகொண்டு புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே இது போன்ற போராட்டங்கள் அதிகம் நடத்தப்படுகிறது. வன்முறையை தூண்டிவிட்டு ஆட்சியை கலைக்கலாம் என்று அங்குள்ள எதிர்கட்சிகள் செயல்படுகின்றன என கூறினார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…