#BREAKING: பேட்டரி டார்ச் லைட் சின்னம் வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு.!
மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னம் வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் கடந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் தங்களுக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் டார்ச் லைட் சின்னம் கோரிய போதும், அது வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த கட்சி டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளதால் தற்போது அந்த சின்னம் காலியாக உள்ளது.
அதனால் தங்களுக்கு அந்த சின்னத்தை ஒதுக்குமாறு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்த நிலையில், பிப்ரவரி 2-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.