வெள்ளப்பெருக்கு எதிரொலி.. குற்றால அருவிகளில் குளிக்க தடை.!

மக்களின் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Courtallam

தென்காசி : தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடிகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதிகாப்பு கருதி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்த்துள்ளனர்.

இதனிடையே, குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்றும் 10-வது நாளாக தடை தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் கொட்டும் தண்ணீரை கம்பி வேலிக்குள் நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கண்டு செல்கின்றனர்.

இதேபோல், தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்