இன்று மெரினா கடலில் குளிக்க தடை..! போலீசார் தீவிர கண்காணிப்பு..!
காணும் பொங்கலை முன்னிட்டு இன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிப்பு.
காணும் பொங்கலை முன்னிட்டு பொதுவாக மக்கள் அனைவரும் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மெரினா கடற்கரையிலும் அதிகமான மக்கள் கூடி வருகின்றனர்.
இந்த நிலையில் மெரினா கடற்கரையில் இன்று பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் இறங்கி மக்கள் குளிக்க முடியாத வகையில் கடற்கரையில் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.