ஓணம் பண்டிகை..! இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி.!
இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய திருவிழா ஓணம். ஆண்டு தோறும் இந்த பண்டிகை 10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை கடந்த 20ம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், இன்று 29ம் தேதி ஓணம் விருந்து படைத்து மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடி முடிப்பார்கள்.
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.