கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி எஸ்.ஏ.பாஷா உயிரிழப்பு!
1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு குற்றவழக்கில் கைதாகி இருந்த எஸ்/ஏ.பாஷா உடல்நலக்குறைவு காரணமாக தற்போது உயிரிழந்துள்ளார்.
கோவை : கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியன்று கோவை நகரில் 12 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை பெற்று வருகின்றனர்.
அதில், அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பாஷா என்பவர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவாராக பார்க்கப்படுகிறார். கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த 72 வயதான எஸ்.ஏ.பாஷா, உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் பிணையில் வெளியே வந்தார்.
கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா, சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.