பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை ஆம்னி பேருந்துகள் சங்கம் புறக்கணித்தது. அதாவது கோயம்பேடுக்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கவேண்டும் எனவும் கோயம்பேட்டில் இருந்து இயக்கக் கூடாது எனவும் தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்ததை ஆம்னி பேருந்துகள் சங்கம் எதிர்த்தது.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 பார்க்கிங் பே-தான் இருப்பதாக கூறுகின்றனர். 1,000 ஆம்னி பேருந்துகளை இந்த 144 நிறுத்தத்தில் எப்படி நிறுத்துவோம் என கூறிய ஆம்னி பேருந்துகள் சங்கத் தலைவர் அன்பழகன் பேருந்து கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகள் இயக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது – ஆம்னி நிர்வாகம்!
மேலும் தங்கள் மீது அரசு வழக்கு தொடர்ந்தால், நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை எனவும் அன்பழகன் கூறினார். இதனிடையில் கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் உள்ளே நுழையாதபடி தடுப்புகள் போடப்பட்டு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…