காவிரி ஆற்றில் தடுப்பணை என்னவாயிற்று.? பொதுப்பணித்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
காவேரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டம் குறித்த முழு விவரத்தையும் தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும். – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
காவிரி ஆற்று நீர் பெருபாலான நீர் கடலில் கலந்து விடுவதால், காவிரி ஆற்றுநீரை சேமிக்க கரூர் புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்டபட வேண்டும் என அதற்கான நடடிக்கைகள் முன்னெடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இதனை இன்று விசாரித்த நீதிபதி அமர்வு ,’காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக அரசால் முன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், ‘ காவேரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டம் குறித்த முழு விவரத்தையும் தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும்.’ என உத்தரவிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.