நாளை காலை கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வுமண்டலம் …!
நாளை காலை காற்றழுத்த தாழ்வுமண்டலம் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில், தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை அதிகாலையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.