டிச.7ஆம் தேதி பார் உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு..!

டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி கோரி டிசம்பர்7-ஆம் தேதி பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக பார்கள் மூடப்பட்டுள்ளதால் ரூ.400 கோடி வரை வாடகை பாக்கி உள்ளதாக டாஸ்மாக் பார் சங்கம் தெரிவித்தனர்.
மேலும், டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி வழங்காததால் 7-ம் தேதி அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், மக்கள் அதிகம் ஒரே இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், கோவில்கள், வணிக வளாகங்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் டாஸ்மாக் பார் ஆகியவை மூடப்பட்டது.
பின்னர், படிப்படியாக கோவில்கள், வணிக வளாகங்கள் போன்றவை திறக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால், டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை பார்களை திறக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025