உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தடை விதிப்பதா? – வானதி சீனிவாசன்
அரசியலமைப்பு சட்டப்படி இயங்கும் ஆர்எஸ்எஸ்-க்கு, அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த உரிமை உள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து வானதி சீனிவாசன், ஆர்எஸ்எஸ்-ஸை வீழ்த்த முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியில் முடிந்தது; இந்து விரோத திமுக அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அரசியலமைப்பு சட்டப்படி இயங்கும் ஆர்எஸ்எஸ்-க்கு, அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த உரிமை உள்ளது; அடிப்படை உரிமையைப் பறிப்பது ஜனநாயகத்தை முடக்கும் பாசிச நடவடிக்கை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தடை விதிப்பதா? தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளை முடக்க நினைப்பது பகல் கனவாகவே முடியும் என தெரிவித்துள்ளார்.