#BREAKING : ரேஷன் கடைகள் அருகே பேனர்கள் வைக்கக் கூடாது- உயர்நீதிமன்றம் அதிரடி ..!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2,500 அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக வழங்கப்பட்ட டோக்கன்களில், முதல்வர், துணை முதல்வர், புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி, தி.மு.க சார்பில் வழக்கு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகள் அருகில் பேனர்கள் வைக்க கூடாது எனவும், ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டு பிரசுரங்களை விநியோகிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு பைகளில் முதல்வர், முன்னாள் முதல்வரின் படங்கள் இடம் பெறலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.