பேனர் விவகாரம்: தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் -கோவை ஆட்சியர் கிராந்திகுமார்.!!

Banner

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் நேற்று 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். பேனரை வைத்துக்கொண்டு இருக்கும் போது சூறாவளிக்காற்று வீசியதால், அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒப்பந்ததாரர்கள் பாலாஜி, பழனிசாமி, நில உரிமையாளர் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு, இவர்கள் 3 பேர் மீதும்  வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த இந்த விவகாரத்தில் தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.  மேலும். அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்ற  காவல்துறை, உள்ளாட்சி அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கும் எனவும்  கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்