காவல்நிலைத்திற்குள் நைட்டி, சார்ட்ஸ் உடைகளுடன் செல்ல தடை! திருப்பூர் காவல்நிலையம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்நிலையம் திருமுகன்ப்பூண்டி காவல்நிலையம். இந்த காவல்நிலையத்தில் ஒரு அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அதென்னவென்றால், காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வெறுப்பவர்கள் நைட்டி மற்றும் சார்ட்ஸ் அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளானர். மேலும் லுங்கி அணிவதையும் தவிர்க்குமாறு காவல்துறையினர் கூறுவதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் உமா அவர்கள் கூறுகையில், அந்த அறிவிப்பில் இருக்கும் உடை கட்டுப்பாடு கட்டாயம் அல்ல என்றும், பெரும்பாலான இளைஞர்கள் சார்ட்ஸ் அணிந்து வருவதால் அரசு அலுவலகத்தின் சூழல் கெடுகிறது, அதனை தவிர்க்கவே இதனை சோதனை முறையில் அமல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெறாவிட்டால், உடனடியாக நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.