சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை பயன்படுத்த அனுமதிக்க தமிழக அரசு அனுமதி மறுத்ததைத்தொடர்ந்து ரெமியா எண்டர்பிரைசிஸ் என்ற தனியார் நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, தமிழகத்தில் இயற்கை வளங்களை
பாதுகாக்கும் பொருட்டு, ஆறு மாதங்களுக்குள் அனைத்து மணல் குவாரிகளை மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, உயர்நீதிமன்ற கிளையின்
உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இரண்டு வாரத்துக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகள் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…