Holiday: வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை.!

Banks - Holiday

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வங்கிகளுக்கு இன்று முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, இந்த பொங்கல் விடுமுறையை ஜாலியாக கொண்டாட சென்னை, திருச்சி, திருப்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

ஆபாச படங்களை தனிநபர் பார்ப்பது குற்றமல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை:

1.சனி – ஜனவரி 13 (மாதத்தின் 2வது சனி)

2.ஞாயிறு – ஜனவரி 14 (போகி பண்டிகை)

3.திங்கள் – ஜனவரி 15 (தைப்பொங்கல்)

4.செவ்வாய் – ஜனவரி 16 (திருவள்ளுவர் தினம்)

5.புதன் – ஜனவரி 17 (உழவர் திருநாள்)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்