கவனத்திற்கு!!மதியம் 2 மணி வரைக்கு தான்…வங்கிகள்.!அறிவிப்பு வெளியீடு

Published by
kavitha

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, வங்கிகளின் வேலை நேரம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வங்கிகள் அனைத்தும் மதியம்  2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தமிழக மாநில அளவிலான வங்கிகள் குழு அறிவித்துள்ளது.

இது குறித்து அறிவிப்பில் தெரிவித்துள்ள தமிழகத்தின், மாநில அளவிலான வங்கிகள் குழு, நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவுகிறது இவை வங்கிகளிலும் பரவாமல் இருக்க சரியான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய அரசு சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டது. எனவே வங்கிகள்  வாடிக்கையாளர்களுக்கு தொடர் சேவை வழங்குவதற்காக, பொது வணிக தொடர்ச்சி திட்டம் தற்போது நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்த குழு தமிழகத்தில் உள்ள வங்கிகள், அடுத்த அறிவிப்பு வரும் வரை, பணம் செலுத்துதல், பெறுதல், காசோலை பரிவர்த்தனை, அரசு பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் போன்றவைகளை எல்லாம் காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை மட்டுமே மேற்கொள்ளலாம் என்று தெரிவித்து வங்கிகளுக்கு சில அறிவுறுத்தலையும் அளித்துள்ளது அதன்படி

  • பணம் செலுத்துதல் மற்றும் பெறுதல், ஏ.டி.எம்., இயந்திரம், பணம் செலுத்தும் இயந்திரம் போன்ற சேவைகள், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  • பெட்டிகளில் செலுத்தப்படும் காசோலைகள், ‘ஆன்லைன்’ பரிவர்த்தனைகள் போன்ற சேவைகளும் கிடைக்க, தேவையான ஏற்பாடுகளை எல்லாம் செய்ய வேண்டும்
  • ஊழியர்கள் எண்ணிக்கையை பொறுத்து, 50 சதவீத ஊழியர்கள் அலுவலகம் வரவும், மீதம்  உள்ளவர்கள் தங்களது வீட்டில் இருந்து பணி புரியவும், வங்கி கிளைகள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம்
  • கூட்டம் அதிகம் உள்ள வங்கிகள், தேவையெனில், போலீஸ் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
  • வைரஸ் பாதித்த பகுதிகள் மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என, அரசு அறிவித்திருந்தால், அந்தப் பகுதி வங்கிகளை எல்லாம் அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை மூடலாம் என்று தெரிவித்துள்ளது.
  • மேலும் இது தொடர்பான அறிவிப்புகளை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். என்று குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
Published by
kavitha

Recent Posts

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

21 minutes ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

2 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

3 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

4 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

6 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

19 hours ago