தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதன் காரணமாக நேற்று முதல் வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால்,கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், காலை 10 மணி வரையே அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,கடந்த 24 மணி நேரத்தில் 33,075 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,கொரோனாவால் 335 பேர் ஒரே நாளில் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 17,670 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,அனைத்து இந்திய வங்கி அலுவலர்கள் அசோசியேசன்ஸ் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், “வங்கிகளில் வாடிக்கையாளர் சேவைகளுக்கு காலை 9.00 மணி முதல் காலை 11.00 மணி வரை மட்டுமே செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கவேண்டும்.மேலும்,வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் மட்டுமே இயங்கவும், அத்தியாவசிய சேவைகளான வைப்பு, பணம் அனுப்புதல் மற்றும் அரசு வணிகம் தொடர்பான பணிகளே மட்டுமே செய்யவும் அனுமதிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல்,அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,தமிழகத்தில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களின் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருந்த நிலையில்,நேற்று முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…