வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு-போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! முடங்குகிறதா வங்கிகள்..!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வங்கித்துறை பற்றிய பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் அறிவிப்பையும் வெளியிட்டார்.
அதன் படி பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் ஒன்றாக இணைக்கப்படும் எனவும், பஞ்சாப் நேஷனல் வங்கி – ஓரியண்டல் வங்கி – யுனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்க படும், எனவும், இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. அதேபோல, ஆந்திர வங்கி – யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி – கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட உள்ளது என்று தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்தார்.
இதன் மூலம் இதுவரை இருந்து வந்த 27 பொதுத்துறை வங்கிகள் இனி 12 ஆக குறைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக எந்த வித ஆட்குறைப்பும் ஏற்படுத்தப்பட மாட்டது என்று தெரிவித்தார்.இந்நிலையில் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இதனை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ளது.