பொங்கல் தினத்தில் வங்கி தேர்வு – வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நாளில் தேர்வு நடத்துவதற்கு வங்கி அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு.
ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் அன்று எஸ்.பி.ஐ கிளார்க் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் தினத்தன்று தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள ஸ்.பி.ஐ கிளார்க் தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும் என வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகத்திடம் பேசியுள்ளதாக வங்கி அதிகாரிகள் சங்கம் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழர் திருநாளில் நடைபெறும் எஸ்.பி.ஐ கிளார்க் பணிக்கான தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் 355 பணியிடங்கள் உள்ளிட்ட மொத்தம் 5,486 பணியிடங்களுக்கு வரும் 15-ஆம் தேதி முதன்மை தேர்வு அறிவிக்கப்ட்டுள்ளது.