பேஸ்புக் விளம்பரத்தால் ரூ.55 லட்சம் ஏமாந்த வங்கி ஊழியர் ..! சிக்கிய திருடன் ..! மக்களே உஷார் ..!
தமிழ்நாட்டில் நூதன முறையில் பல பண மோசடிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இது போன்ற சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் அம்பத்தூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் பேஸ்புக் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் ஒன்றை பார்த்திருக்கிறார்.
சென்னை வந்தடைந்த வெற்றி துரைசாமி உடல்..!
அப்போது அந்த விளம்பரத்தை பார்த்து மறுமுனையில் இருப்பவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில் மறுமுனையில் இருப்பவர் பிட்காயின் டிரேடிங் (Bit Coin Trading) பற்றி பேசி இருக்கிறார். அதில், இந்த பிட்காயின் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் உடனுக்குடன் லாபம் பெறலாம், பெரும் அந்த லாபங்கள் எல்லாம் உடக்குடன் வங்கி கணக்கில் முறையாக செலுத்தப்பட்டு விடும் எனலாம் ஆசை வார்த்தைகள் பேசியுள்ளார்.
மேலும், அவருக்கென ஒரு ப்ரொபைலையும் (Profile) தயார் செய்து அதனுடன், யூசர் நேம் (User Name ) மற்றும் பாஸ்வட் (Password) கொடுத்துள்ளார். அந்த நபர் இந்த செய்கையால் இதனை உண்மை என நம்பி பாலமுருகனும் 55,38,000 ரூபாயை கொடுத்துள்ளார். பின்பு லாப தொகைகள் எதுவும் வராததால் தான் ஏமாற்ற பட்டதாக உணர்ந்த பாலமுருகன் ஆவடி சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த போலீசார் பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளை ஆராய்ந்தனர்.
அதில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த டொமினிக் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணியில், இவர் பலரையும் சமூக வலைத்தளங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. மேலும், அதை டெல்லியில் இருக்கும் ஒரு மர்ம கும்பலுக்கு அனுப்புவார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சைபர் க்ரைம் போலீசார் இந்த வழக்கை மேற்கொண்டு அடுத்தகட்ட விசாரணையும் நடத்தி வருகின்றனர்.