பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஏதுமின்றி உள்நுழைந்த வங்காளதேசம் இளைஞர் கைது.!
- ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மற்றும் தீவிரவாதிகள் நுழையவுள்ளதாக தகவல்.
- குர்லா விரைவு ரயிலில் இருந்து இறங்கி வந்த இளைஞர் ஒருவர் முரண்பாடாக தகவலை தெரிவித்ததால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர்.
ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மற்றும் தீவிரவாதிகள் நுழையவுள்ளதாக வெளியான தகவலையடுத்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை ஈரோடு ரயில்நிலையத்திற்கு வந்த குர்லா விரைவு ரயிலில் இருந்து இறங்கி வந்த இளைஞர் ஒருவர் முரண்பாடாக தகவலை தெரிவித்ததால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சூரம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் வங்காளதேசம் டாக்காவைச் சேர்ந்த உஜ்ஜல்குமார் டட்டா என்பதும், அவர் பாஸ்போர்ட், விசா மற்றும் அடையாள அட்டைகள் ஏதுமின்றி, மேற்கு வங்கம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் குர்லா விரைவு ரயில் மூலமாக ஈரோட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து முறைகேடாக இந்தியாவிற்குள் நுழைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.