#BREAKING: பங்காரு அடிகளாருக்கு நாளை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு..!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார்.
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவில் கருவறையில் பெண்கள் பூஜை செய்யும் பழக்கத்தையும் கொண்டு வந்தவர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் பக்தர்களால் பங்காரு அடிகளார்”அம்மா” என அழைக்கப்பட்டவர். பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதற்கு குருவாக இருந்தவர். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டிய அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது. பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர். ஆதிபராசக்தி கோயிலில் மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் பூசை நடத்தலாம் என்ற புரட்சியை 35 ஆண்டுகளுக்கு முன்னரே செய்தவர் பங்காரு அடிகளார். சித்தர் பீடம் , கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வந்தவர். இவரது இறுதிச் சடங்கு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. பங்காரு அடிகளாரின் மறைவை தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது.
கோவில் அருகிலேயே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சமாதி ஒன்றை பங்காரு அடிகளார் கட்டி வைத்துள்ளார். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கிடையில் பங்காரு அடிகளார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவு செய்தி அறிந்து வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டுக்கும் மேல் மிகச்சிறப்பாக நடத்தி கல்வி மருத்துவ சேவைகளை வழங்கியவர்.
ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்தும் புரட்சிகரமான நடைமுறையை வழக்கப்படுத்தினார். பங்காரு அடியாளரின் ஆன்மீக புரட்சி மிகவும் மதித்து போற்றத்தக்கது. பிங்காரு அடிகளாரை இழந்து வாடும் குடும்பத்தினர், பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த பங்காரு அடிகளார் சேவையை போற்றும் வகையில் அரசு மரியாதை உடன் நாளை இறுதி சடங்கு நடக்கும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025