பேனரால் இளம்பெண் பலி -அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு
சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளிக்கரணை அருகே திருமண நிகழ்ச்சிக்காக அதிமுக பிரமுகர் சார்பில் சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.அந்த சமயத்தில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதன் பின் அங்கு வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது.இந்த விபத்தில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.இவர் குரோம்பேட்டையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்த பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டது.சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.மேலும் பேனர்கள் அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.