தூத்துக்குடியே ஸ்தம்பிக்கும் வகையில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரம் கிராமத்தினர் ஸ்டெர்லைட் ஆலையால் தங்களின் வாழ்வாதாரமும் உடல் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போராடி வருகின்றனர். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள இருந்தது. இது குமரெட்டியார்புரம் அருகே அமைய இருந்ததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என கிராம மக்கள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனைதொடர்ந்து, குமரெட்டியார்புரம் கிராமமக்களுக்கு ஆதரவாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முழக்கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் இன்று ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்சியர் உத்தரவின்பெயரில், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோல், தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடியே ஸ்தம்பிக்கும் வகையில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.20,000 மேற்பட்ட மக்கள் தற்போது நடத்தி வருகின்றன.மேலும் ஜல்லிகட்டை விட ஒரு மாபெரும் போராட்டமாக உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…