ஆன்_லைன் வெட்டுக்கு………வெட்டு வைத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!!
ஆன் லைனில் பட்டாசு விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தகுந்த உரிமங்கள் இல்லாமல் ஆன் லைனில் பட்டாசுகள் விற்பனை செய்வதை தடை செய்யும்படியும், வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு இது குறித்த உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்த போது ஆன் லைன் விற்பனையை கட்டுப்படுத்த எந்த விதிகளும் இல்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய விதிமீறல்களை அனுமதித்தால் அது பாதுகாப்பற்ற சீன பட்டாசுகளுக்கு விற்பனையை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல்,உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆன் லைன் பட்டாசு விற்பனையை தடை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU