ஆன்லைன் ரம்மிக்கு தடை? முதல்வர் தலைமையில் கூடியது அமைச்சரவை .கூட்டம்.!
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் சமீப காலமாக தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் ஆனால்சின் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பது தொடர்பான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாகவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.