கன்னியாகுமரியில் நாளை சுற்றுலா பயணிகளுக்கு தடை.. ட்ரோன் பறக்க தடை!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, ன்னியாகுமரியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரியில் நாளை ட்ரான்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 6 நாள் பயணமாக கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் நாளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். நாளை வரும் குடியரசுத் தலைவர் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துகிறார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், நாளை கன்னியாகுமரியில் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், திரிவேணி சங்கமம், கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் நாளை ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.