தூத்துக்குடியில் அச்சிட்ட பேப்பரில் வடை, பஜ்ஜி தர தடை – ஆட்சியர் அதிரடி
தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், அச்சிடப்பட்ட பேப்பரில், வடை, பஜ்ஜி தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாக டீ கடைகளில் வடை, பஜ்ஜி போன்ற பலகாரங்களை செய்தி தாள்களில் தான் கொடுப்பதுண்டு. இந்த நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், அச்சிடப்பட்ட பேப்பரில், வடை, பஜ்ஜி தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
தடையை மீறி அச்சிடப்பட்ட பேப்பரில், வடை, பஜ்ஜி விநியோகிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.