#BREAKING: பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு தடை.!
பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய் விற்கக்கூடாது என்று தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2011-ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டப்படி, எண்ணெய்யை பாக்கெட்டில் அடைக்காமல் விற்கக்கூடாது என்பதை மேற்கோள்காட்டி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அதிரடி உத்தரவை பிறப்பிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி சமையல் எண்ணெய்கள் தயாரிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சமையல் எண்ணெய்யின் தரத்தை ஆய்வு செய்வதற்கான எத்தனை ஆய்வகங்கள் உள்ளன என்றும் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன எனவும் கேள்வி எழுப்பினர். பின்னர் விதிகளை மீறியதாக எத்தனை வழக்குகள் இருக்கின்றது என்ற விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் சில்லறையாக மற்றும் பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய்யை விற்கக்கூடாது என்று கூறி, இந்த வழக்கை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.