பஞ்சுமிட்டாய் விற்க தடை – தமிழக அரசு

Cotton Candy

பஞ்சு மிட்டாய்களில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் பொருள் கலக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பலவேறு பகுதிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில் மஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து புதுச்சேரியில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. முறையான உரிமம் பெறும் வரை பஞ்சுமிட்டாய் விற்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இந்த நிலையில், பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழகத்திலும் தடை விதித்து அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிக்கையில், பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் Rhodaminbe-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு தாவுகிறாரா எம்.எல்ஏ விஜயதரணி..?

இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 பிரிவு 3(1) (zz) (iii) (v) (viii) (xi) மற்றும் பிரிவு 26(1) (2) (i) (ii) (v) – ன்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள், பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும், இது குறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்