ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை நியாயம்! – கே.பாலகிருஷ்ணன்

Default Image

தமிழ் நாடு அரசிடமும், காவல்துறையிடமும் சட்டப்படி அனுமதி பெற்று திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டத்தை நடத்த முயற்சி செய்வோம் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். 

அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர்  பக்கத்தில், காந்தியின் பேரால் மனித சங்கிலியை தமிழ் நாடு அரசு ஆதரிக்க வேண்டும் ! தேசத் தந்தை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில், தமிழ் நாட்டில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது.

அண்ணல் காந்தியின் படுகொலை காரணமாக தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு, காந்தி பிறந்த நாளில் பேரணி நடத்திட நீதிமன்றம் அனுமதி கொடுத்தது பொருத்தமற்ற முடிவாகும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அண்மைக் காலம் வரையிலும் நடந்த பல்வேறு மத வன்முறை, குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு உள்ளது. அது பற்றிய வழக்குகளும் உள்ளன. அதன் காரணமாகவே, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ் நாடு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இந்த சூழலை நீதிமன்றம் கணக்கிலெடுத்திருக்க வேண்டும்.

இப்போது, சிறுபான்மை மத அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், பெரும்பான்மை வகுப்புவாத, பாசிச வகைப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடந்தால் அது மோசமான விளைவை உருவாக்கும்.

எனவே, நீதிமன்றம் கொடுத்த அனுமதியை மறுத்து காவல்துறை எடுத்துள்ள முடிவு 100 சதவீதம் நியாயமான ஒன்று. அதே சமயம், காந்தி பிறந்த நாளில், மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கும் அனுமதி இல்லை என்று செய்திகள் வருகின்றன. அவ்வாறானால் அது சரியான முடிவல்ல.

அதே சமயம், காந்தி பிறந்த நாளில், மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கும் அனுமதி இல்லை என்று செய்திகள் வருகின்றன. அவ்வாறானால் அது சரியான முடிவல்ல. தமிழ் நாடு அரசு மதவெறி அமைப்புகளையும், மத நல்லிணக்க நடவடிக்கைகளையும் நேர்கோட்டில் வைத்து பார்ப்பது மதவெறி சக்திகளை தனிமைப்படுத்த உதவாது. இவ்விசயத்தில், தமிழ் நாடு அரசிடமும், காவல்துறையிடமும் சட்டப்படி அனுமதி பெற்று திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டத்தை நடத்த முயற்சி செய்வோம்.’ என  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்