75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்.30 முதல் தடை..!

75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில், 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025