பி.எஃப்.ஐ மீதான தடை – நடுவர் மன்றம் இன்று விசாரணை!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகள் மீதான தடை தொடர்பாக இன்று விசாரணை.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகள் மீதான மத்திய அரசு விதித்துள்ள தடை தொடர்பாக இன்று விசாரணை தொடங்குகிறது. சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு நடுவர் மன்ற சென்னை அமர்வு 3 நாட்கள் விசாரணை நடத்துகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு மன்ற நடுவரான தினேஷ்குமார் சர்மா விசாரணை நடத்துகிறார். விசாரணையை முன்னிட்டு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மாநில நீதித்துறை பயிலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகள் மீதான தடை தொடர்பான விசாரணையின்போது சாட்சியம் அளிக்க விரும்புகின்றவர்கள் உறுதிமொழி பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறுக்கு விசாரணை ஏதேனும் இருப்பின் அதற்காக நடுவர் மன்றத்தின் முன் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகளை 5 ஆண்டுகளுக்குத் இந்திய அரசு தடை செய்துள்ளது.