கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்த தடை – மா.சுப்பிரமணியன்

கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை. வேறுநிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால், அதற்கு அனுமதி பெற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்ற 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களை தவிர்த்து மற்ற எந்த மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
மேலும், கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை. வேறுநிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால், அதற்கு அனுமதி பெற வேண்டும். மாணவர்கள் கட்டாயமாக தடுப்பூசி போடவேண்டும் என்றும், கல்லூரிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025