ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை! மீறினால் 10 லட்சம் அபாரம், 3 ஆண்டுகள் சிறை!

Default Image

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் அபராதம்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார் இதையடுத்து, அக்.17ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டம் இயற்றப்பட உள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கான தண்டனை விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம்/நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

மேலும், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக இரண்டாம் முறை தவறிழைக்க நபர்கள் / நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்