தமிழகத்தில் ட்ரீம் 11 செயலிக்கு தடை – தமிழக அரசு

Default Image

சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகள் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் ட்ரீம் 11 செயலுக்கு தடை.

கடந்த 4ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார். அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஆக்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தடையை மீறி ஆன்லைனில் சூதாடுவதற்கு ரூ.5000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை என குறிப்பிட்டனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகள் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்ற வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியை தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு தடை என தெரிவித்துள்ளது. தடையை தொடர்ந்து, இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து தமிழகத்தில் ட்ரீம் லெவன் செயலி செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்