ஆடி,அமாவாசை ஆடிப்பூரத்தில் பக்தர்களுக்கு தடை – அமைச்சர் உத்தரவு..!
ஆடி,அமாவாசையான ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆடி,அமாவாசையான ஆகஸ்ட் 8 மற்றும் ஆடிப்பூரமான 11 ஆம் தேதிகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.
எனினும்,ஆகம விதிப்படி ஆடி,அமாவாசை ஆடிப்பூரத்தில் பக்தர்களின்றி வழிபாடு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.