#Breaking:அதிமுக பொதுக்குழுவுக்கு தடை? – தனிநீதிபதியிடம் முறையிட்ட ஓபிஎஸ்!
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.மேலும்,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து,உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும்,தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரியும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினரும்,ஓபிஎஸ் ஆதரவாளருமான சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம்,கடந்த ஜூன் 22 ஆம் தேதி நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்,ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருத்தும் எனவும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த முறையீட்டில் கோரிக்கை வைக்க முடியாது எனவும் கூறி ஜூலை 7 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.
இந்த வேளையில்,அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி முன் ஓபிஎஸ் முறையீடு செய்துள்ளார்.பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடப்பதாக நேற்று மாலைதான் தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாகவும்,எனவே பொதுக்குழுவுக்கு தடை விதிக்க அவசர வழக்காக இதனை எடுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று நாளை அதனை விசாரிப்பதாக தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே,ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும்,அதன்படி,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.