வருகிறது தடை..!!தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒப்படைக்க டிச..,31 கடைசி எச்சரிக்கை..!தயாரித்தால் கடும் நடவடிக்கை.!
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் டிச.31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி கடைசி காலகேடுவினை அறிவித்துள்ளது.
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், தெர்மோக்கோல், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் மட்டும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்தாண்டு முதல் அதாவது ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடைவிதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தக வியாபாரிகள் அனைவரும் அவர்களின் வார்டு அலுவலகங்களில், வருகின்ற டிச., 31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு மாநாகரட்சி சார்பாக வலியுறுத்தியுள்ளது.
மேலும் அரசால் தடைவிதித்த இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ அல்லது விற்றாலோ மற்றும் பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநாகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையான வாழையிலை, காகித சுருள், மரப் பொருட்கள், காகித குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
இதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் மாசில்லாத சென்னையை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகராடசி கோரிக்கை கலந்த எச்சரிக்கையுடன் அறிவுறுத்தியிருக்கிறது.