சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இன்று முதல் 15 நாட்களுக்கு காவல்துறை தடை.
சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 30-ஆம் தேதி (நேற்று) இரவு 11 மணிக்கு தொடங்கி அக்.15-ஆம் தேதி இரவு 11 மணி வரை தடை உத்தரவில் அமலில் இருக்கும் என சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தெரிவித்துள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் விசிக்காவின் மனித சங்கிலி அறிவிப்பு போன்றவற்றால் தமிழ்நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகஅரசு எந்தவொரு பேரணி, பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவம்பர் 6-ம் தேதிக்கு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை காரணமாக சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…