இந்த காலத்தில் இப்படி ஒரு தமிழக கிராமமா?! முன்னோர்கள் கொடுத்த வாக்கிற்காக தற்போது வரை பூரண மதுவிலக்கு!

Default Image

தமிழகம் முழுவதும் தற்போது குடிமகன்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். இந்த நிலைமை எப்போது மாறுமோ, எப்போது பூரண மதுவிலக்கு வருமோ என தமிழகம் எதிர்பார்த்து வருகிறது. இந்த வேளையில் தங்கள் முன்னோர்கள் மது குடிக்க மாட்டோம் என கொடுத்த வாக்குறுதியை இன்னுமும் காப்பாற்றி வருகின்றனர்.
இந்த அதிசய கிராமம் இருக்கும் இடம் சிவகங்கை மாவட்டம். இந்த ஊரின் பெயர் ஆளவிளாம்பட்டி. இந்த ஊரில் குறிப்பிட்ட சமூகத்தினர் 170 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த சமூகத்தினர் ராமசாமி – பொன்னழகி அம்மாள் தெய்வங்கள் கும்பிடுவார்கள். இந்த சமூகத்தின் முன்னோர்கள் ராமசாமி – பொன்னழகி அம்மாள் தெய்வங்களிடம் இனி தங்கள் வம்சத்தில் யாரும் மது அருந்த  மாட்டோம் என வாக்குறுதி அளித்துள்ளனர். இதனை தற்போது வரை உள்ள இளம் தலைமுறையினர் கடைபிடித்து வருகின்றனர். இந்த கட்டுப்பாட்டை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
இதே போல இங்கு யாரும் வரதட்சணை கொடுப்பதும் இல்லை. வாங்குவதும்  இல்லை. இவர்கள் முதன்மை தொழில் விவசாயம்தானாம். வானம் பார்த்த பூமியாக இருப்பதால் நிறைய இளைஞர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்