பாமகவினர் சாலை மறியல்…! வாக்குப்பதிவு நிறுத்தம்….!
முகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக பாமகவினர் சாலைமறியல் செய்த நிலையில், வாக்குப்பதிவு நிறுத்தம்.
தமிழகத்தில், சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலையிலேயே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே, மிகவும் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக பாமகவினர் சாலைமறியல் செய்த நிலையில், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.