இவர்களின் கோரிக்கையை பாமக ஆதரிக்கிறது! – டாக்.ராமதாஸ்
மாற்றுத்திறனாளிகள் அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவது அவர்களின் உரிமை என ராமதாஸ் ட்வீட்.
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் வந்து சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதன்படி தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
போலீசார் தடுத்து நிறுத்தம்
காவல்துறையினர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். அனுமதியை மீறி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயல்பவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தியுள்ள நிலையில், அனுமதியை மீறி நடப்பவர்கள் கைது செய்யப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டாக்.ராமதாஸ் ட்வீட்..!
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.1000லிருந்து ரூ.3000ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு ரூ.1500லிருந்து ரூ.5000ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பாமக ஆதரிக்கிறது!
இந்தப் போராட்டத்திற்காக சென்னைக்கு புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் ரயில் நிலையங்களில், ஏதோ பயங்கரவாதிகளைப் போலக் கருதி காவல்துறை தடுத்து கைது செய்துள்ளது. சென்னையிலும் கைது வேட்டை தொடர்ந்தது. காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது!
மாற்றுத்திறனாளிகள் அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவது அவர்களின் உரிமை. கடவுளின் குழந்தைகளான அவர்களை தடுப்பதும், தாக்குவதும் மன்னிக்க முடியாதவை. மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும், உணர்வுகளையும் மதித்து அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவது அவர்களின் உரிமை. கடவுளின் குழந்தைகளான அவர்களை தடுப்பதும், தாக்குவதும் மன்னிக்க முடியாதவை. மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும், உணர்வுகளையும் மதித்து அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!(3/3)@CMOTamilnadu
— Dr S RAMADOSS (@drramadoss) March 22, 2022