பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை..! சபாநாயகருடன் அரசுக் கொறடா திடீர் சந்திப்பு …!

Default Image

பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை:

  • 1998ல் பேருந்துகள் மீது கல்வீசியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

  • தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார் பாலகிருஷ்ண ரெட்டி. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி இழக்க நேரிடும். மேல்முறையீட்டில் தண்டனை உறுதியானால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதி ஆகும்.

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா கடிதம் ஏற்பு: 

  • 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்தார்.அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கீடு: 

  •  பின்  பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது.

சபாநாயகருடன் அரசுக் கொறடா சந்திப்பு: 

  • இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்