இன்று மாலை உருவாகும் புயலானது புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தென் கிழக்கு பகுதியில் 770கிமீ தூரத்திலும், காரைக்கால் கடற்கரையில் இருந்து 690கிமீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.அது இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் எனவும் , இன்று மாலை புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வ மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், 8,9,10 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் எனவும், 8 ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனவிம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் , கள்ளகுறிச்சி, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து 9ஆம் தேதி திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி , சேலம், தர்மபுரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் , 9ஆம் தேதி புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களில் ஆதி கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
காற்றின் அளவை பொறுத்த வரையில் 8,9,10 ஆகிய தேதிகள் கடலோர பகுதிகளில் காற்று வீசும் எனவும், 8ஆம் தேதி மாலை முதல் 9 மாலை வரையில் வடதமிழகம் பகுதிகளில் 50-60 கிமீ வேகத்தில் காற்றும் வீசும் எனவும், 10ஆம் தேதியில் 70- 80 கிமீ காற்று வீசும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு தமிழக கடலோரபகுதிகளில் 8 முதல் 9ஆம் தேதிகளில் 40 முதல் 50 கிமீ காற்றும் 10 ஆம் தேதி 50 -60கிமீ வரையில் காற்று வீசக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்புடனும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் .
10 ஆம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், இந்த புயலானது புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…