எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை இலக்கியத்திற்காக மத்திய அரசால் வழங்கப்படக்கூடிய சாகித்ய அகாடமி விருது தான் பால சாகித்ய புரஸ்கார் விருது. 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிப் பிரிவில் எழுத்தாளர் எஸ் பாலபாரதிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பாலபாரதிக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற புதினப் படைப்புக்காக, தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் திரு.யெஸ்.பாலபாரதி அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். மேலும் பல படைப்புகளைத் தமிழுக்கு வழங்கி புதிய உயரங்களைத் தொடட்டும் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…