பக்ரீத் பண்டிகை: ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது – ஐகோர்ட் கிளை

madurai high court

பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க கோரி வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவு.

இந்தாண்டு சவுதி அரேபியா தவிர மற்ற நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில், அரசிடம் விளக்கம் பெறாமல் பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் ஆடு, மாடுகளை வெட்டி பலியிட தடைவிதிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, அரசிடம் விளக்கம் பெறாமல் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது.

ஏன் பண்டிகை நெருங்கும் கடைசி நேரத்தில் மனுதாக்கல் செய்துள்ளீர்கள் என்றும் கடந்த ஆண்டு நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் நீங்கள் ஏன்? கடைசி நேரத்தில் மனுதாக்கல் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கு குறித்து திருச்சி காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு, நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்