மதுரை வாடிப்பட்டியில் உள்ள அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி ஒன்று ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் கையில் ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்து திமுக மாணவரணி துணை செயலாளர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேக்கரியில் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் பேக்கரியில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அந்த பேக்கரியின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது தொடர்பாக வாடிப்பட்டி காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றச்செயலில் ஈடுபட்ட அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் நெல் கொள்முதல் நிலையத்தில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இந்த முன்விரோதம் காரணமாக தான் திமுக கட்சியை சேர்ந்த அசோகே அதிமுக கட்சியை சேர்ந்தவருக்கு சொந்தமான கடையை அடித்து நொறுக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து பேக்கரி மீது தாக்குதல் நடத்திய அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த பேக்கரி அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி போரூர் செயலாளர் பிரகாசம் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்த நிலையில், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் பிரகாசம் நீக்கப்பட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…