மதுரை சிறையில் இருக்கும் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த போது நந்தினி மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தாகவும், அவர்களை தாக்கியதாகவும் நந்தினி மீது வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கை மாவட்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த 27 ம் தேதி நீதிபதி சாமுண்டீஸ்வரி முன்னாள் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் சாட்சிகள் ஆதாரம் என்று கூறி நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.இதனால் நந்தினி மற்றும் அவரது தந்தை மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்
மேலும் இந்த வழக்கு விசாரணை மீண்டும் வரும் 9 ம் தேதி(இன்று ) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் நந்தினிக்கு ஜூலை 5-ஆம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரும், அவரது தந்தையும் சிறையில் இருந்ததால் திருமணம் தேதி மாற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சாமுண்டீஸ்வரி , இன்றைய விசாரணையில் நந்தினி, அவரது தந்தை ஆனந்தனுக்கு சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக தெரிவித்தார்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…